 |
மேஷ ராசி அன்பர்களே உழைப்பால் உயரும் நாள். வெற்றிகரமான பலன்கள் காண உறுதியாக இருப்பது அவசியம். தீய உணர்வுகளை தவிர்ப்பதன் மூலம் ஆழ்ந்த புரிந்துணர்வு ஏற்படும். திடீர் பயணங்கள் செலவுகள் அதிகரிக்கும். |
 |
ரிஷப ராசி அன்பர்களே உங்களுக்கு சாதகமான நாள் இன்று. உங்களின் கடின உழைப்பால் எதிலும் வெற்றி காண்பீர்கள். இன்று மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும். |
 |
மிதுன ராசி அன்பர்களே கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். எந்த இடையூறும் இல்லாமல் பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பீர்கள். |
 |
கடக ராசி அன்பர்களே உற்சாகமான நாள் இன்று. உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் அல்லது சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பண வரவு உண்டு. புது ஒப்பந்தங்கள் வியாபாரத்தில் கிடைக்கும். |
 |
சிம்ம ராசி அன்பர்களே பொறுமைத் தேவைப்படும் நாள். மற்றவரின் விமர்சனங்களை ஏற்று கொள்ளுங்கள். பணியிடத்தில் சக ஊழியருடன் சில கருத்து வேறுபாடு வந்து செல்லும். மேலும் பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். |
 |
கன்னி ராசி அன்பர்களே திறமைகள் வெளிப்படும் நாள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழல் காணப்படும். நிதிநிலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பீர்கள். தந்தை வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். |
 |
துலாம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் சமநிலையோடு காணப்படுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். பல சௌகரியங்களை உணர்வீர்கள். நிதி வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். |
 |
விருச்சிக ராசி அன்பர்களே உங்களுக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. காரம் மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. |
 |
தனுசு ராசி அன்பர்களே சாதிக்கும் நாள். அரசாங்கத்தாலும் அதிகார பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. பணியிடத்தில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும். இதனால் உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். |
 |
மகர ராசி அன்பர்களே சவால்கள் நிறைந்து காணப்படும். திறமையாகவும் பொறுமையுடனும் சூழ்நிலையை கையாள வேண்டும். சக பணியாளர்களுடன் அமைதியான முறையில் உறவாட வேண்டும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். |
 |
கும்ப ராசி அன்பர்களே கவனமுடன் இருக்க வேண்டிய நாள். உங்கள் அன்றாட செயல்களில் மிகுந்த கவனம் தேவை. நட்பு வட்டாரம் விரிவடையும். வியாபாரத்தில் சூடு பிடிக்கும். ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள். |
 |
மீன ராசி அன்பர்களே புத்துணர்ச்சி பெருகும் நாள். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். |